சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியில் பல்வேறு நிறுவனங்கள் நடத்திய வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் ஏராளமான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு நிறுவனங்களில் மாணவர்களுக்கான பயிற்சி வாய்ப்புகள், தொழிற்சாலைகளுக்கு மாணவர்கள் சென்று அங்கு உற்பத்தி நடைமுறைகளை பார்வையிடுதல், தொழிற்துறை சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ள கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் மூலம் தொழில்நுட்ப வல்லுனர்களின் ஆலோசனைகள், சிறப்புரைகளை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.
இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு வெளியுலக அனுபவத்தை வழங்குவதோடு, அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியில் உள்ள பிரத்யேக வேலை வாய்ப்புக் குழு, பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் சுமுக உறவை பேணி வருவதால், ஏராளமான நிறுவனங்கள் இக்கல்லூரி வளாக வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை தந்து இங்கு படிக்கும் மாணவர்களை தேர்வு செய்கிறார்கள்.
இக்கல்லூரியின் வேலை வாய்ப்புக் குழு, மாணவர்கள் பணியில் சேருவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, அவர்களின் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்துகிறது.
இக்கல்லூரியின் பாடத்திட்டமானது தற்போதைய சூழலுக்கு ஏற்ப தொழில் நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்களை தயார்படுத்துவதோடு, அவர்களின் திறன்களை வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சிமாட்ஸ் கல்லூரி தொடர்ந்து போட்டித்திறன்மிக்க மற்றும் திறமைமிக்க மாணவர்களை உருவாக்கி வருகிறது.
இதன் காரணமாக நேர்முகத் தேர்விற்கு வரும் நிறுவனங்களை வெகுவாக கவர்வதோடு, அதிக மாணவர்களையும் தேர்வு செய்கின்றன. அளிக்கப்படும் வேலைவாய்ப்பு பயிற்சியானது மாணவர்களின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பை மேம்படுத்துவதோடு, சிறந்த திறமைமிக்க மாணவர்களையும் உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.