ஜேஎல்ஆர் (JLR) இந்தியா, தனது வருடாந்திர மழைக்கால சர்வீஸ் முகாமை கடந்த 12-ம் தேதி துவக்கியது. வரும் 17-ம் தேதி வரை இம்முகாம் அங்கீகரிக்கப்பட்ட சில்லரை விற்பனை நிலையங்களிலும் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
பிராண்டட் பொருட்கள், துணைக்கருவிகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் ஆகியவற்றுக்கான இலவச வாகன சோதனை மற்றும் பிரத்யேக சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் பயனடையலாம்.
அனைத்து வாகனங்களும் உயர் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்களின் பராமரிப்பைப் பெறும். தேவையான இடங்களில் அசல் உதிரிபாகங்கள் உத்தரவாதமும் கிடைக்கும்.
முகாமில் 32-அம்சங்களை உள்ளடக்கிய மின்னணு வாகன சோதனைகள், பிரேக், வைப்பர் சோதனை, டயர் மற்றும் திரவ நிலை சோதனை, அத்துடன் விரிவான பேட்டரி சோதனை ஆகியவை செய்யப்படும்.
ஜேஎல்ஆர் நிர்வாக இயக்குநர் ராஜன் அம்பா கூறுகையில், எங்கள் ஹவுஸ் ஆஃப் பிராண்ட்ஸ் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாகன பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்கும் வகையில் முகாம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்திற்குத் தேவையான அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்படும். வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற ஓட்டுநர் அனுபவத்தை உறுதி செய்யும் என்றார்.
வாடிக்கையாளர்களுக்கு, மழைக்காலத்தில் வாகனம் ஓட்டுதல் மற்றும் வாகனப் பராமரிப்பின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சிறப்பு தொகுக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சித் திட்டம் இச்சேவை அடங்கும்.



