fbpx
Homeபிற செய்திகள்லித்தியம் பேட்டரியுடன் சுவர்களில் பொருத்தும் சோலார் இன்வெர்டர்: ‘அரென்க்’ அறிமுகம்

லித்தியம் பேட்டரியுடன் சுவர்களில் பொருத்தும் சோலார் இன்வெர்டர்: ‘அரென்க்’ அறிமுகம்

சோலார் பேட்டரி உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழும் அரென்க் நிறுவனம் மின் தடை பிரச்சினைக்கு சிறந்த தீர்வு அளிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் லித்தியம் பேட்டரியுடன் சுவர்களில் பொருத்தும் சோலார் இன்வெர்டரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த லித்தியம் பேட்டரியானது சோலார் மற்றும் மின்சாரம் இரண்டையும் சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாகும்.

பயனர்களுக்கு சிறந்த வசதியையும் நம்பகத் தன்மையையும் அளிக்கிறது.
இந்த இன்வெர்டரை பராமரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. 100 சதவீதம் எந்தவிதமான பராமரிப்பும் தேவையற்ற முறையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்வெர்டரில் டிஜிட்டல் டிஸ்ப்ளே மானிட்டர் உள்ளது. இது பேட்டரி பேக்கப் மற்றும் அதன் திறன் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
இதை ஆண்ட்ராய்டு செயலி மூலமாகவும் கண்காணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரின் மின்சாரத் தேவைக்கு ஏற்ப இந்த புதிய இன்வெர்டர் 850 வாட்ஸ் மற்றும் 1200 வாட்ஸ் ஆகிய 2 மாடல்களில் கிடைக்கிறது.

850 வாட்ஸ் எடை 28 கிலோவாகவும், 1200 வாட்ஸ் எடை 35 கிலோவா கவும் உள்ளது. எனவே இதை எளிதாக சுவர்களில் பொருத்த முடியும். இந்நிறுவனம் கேரளா, சென்னையில் வினியோகஸ்தர்களை நியமிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அரென்க் நிறுவனம், கேரள அரசின் முக்கிய பொதுத்துறை வாகன உற்பத்தி நிறுவனமான கேரளா ஆட்டோமொபைல்ஸ் லிமிடெட் உடன் இணைந்து, மின்சார வாகன உற்பத்தியில் சிறப்பாக ஈடுபட்டுள்ளது.

புதிய அறிமுகத்தின் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தங்களை ஒரு முன்னணி நிறுவனமாக நிலைநிறுத்திக் கொள்வதோடு சூரிய ஆற்றலை பயன்படுத் துவதையும் மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img