சென்னை, ரேடியல் சாலையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் காவேரி ‘ஹார்ட் இன்ஸ்டி டியூட்’ மையத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
‘உலகின் மிகச்சிறந்த மருத்துவமனைகளுக்கே இணையான உயர்தர இதயநல சிகிச்சையை வழங்குவதில் காவேரி மருத் துவமனை கொண்டிருக்கும் பொறுப்புறுதிக்கு பாராட்டு.
சுகாதார பராமரிப்பு உட்கட்டமைப்பு வசதிகளில் தமிழ்நாடு மாநிலம் கொண்டிருக்கும் தலைமைத்துவ நிலையை காவேரி மருத்துவமனை யின் இப்புதிய ஹார்ட் இன்ஸ்டிடியூட் மேலும் வலுப்படுத்தும்‘ என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
‘மிதமான கட்டணத்தில் சாத்தியமுள்ள மிகச்சிறந்த சிகிச்சை பலன்களுடன் தனிப்பயனாக்கப்பட்ட பிரத்யேக சிகிச்சையை இதயநோய்கள் மற்றும் பிரச்சனைகள் உள்ள அனைத்து நோயாளிகளும் பெறுவதை காவேரி
ஹார்ட் இன்ஸ்டிடியூட் உறுதி செய்யும்’ என்று காவேரி மருத்துவம னையின் செயல் தலைவர் டாக்டர் எஸ். சந்திர குமார் கூறினார்.
காவேரி மருத்துவமனை யின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குநர் டாக்டர் அர விந்தன் செல்வராஜ், ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி (OCT), ரொட்டாபிளேஷன், இன்ட்ரா – வாஸ்குலர் அல்ட் ராசவுண்டு (IVUS) மற்றும் அதிக இடர்வாய்ப்புள்ள சருமத்து ஊடான கரோனரி இடையீட்டு சிகிச்சை (CHIP PCI), உள்ளிட்ட மேம்பட்ட செயல்முறைகளை மேற் கொள்கிறோம்.
மாரடைப்புகளை விரைவாக ஆரம்ப நிலையிலேயே கண் டறிவதற்கு OCT இமேஜிங் தொழில்நுட்ப சேவையை வழங்கும் திறன்கொண்ட தென்னிந்தியாவின் முதல் சிகிச்சை மையங்களுள் இம்மையமும் ஒன்றாகும் என்றார்.
இதயவியல் துறையின் தலைவரும். தலைமை இருதய சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் டாக்டர் அஜித் பிள்ளை, இதய செயலிழப்பு / அதிர்ச்சியுடன் கூடிய முற்றிய கரோனரி தமனி நோய்க்கு சிகிச்சையளிக்க CHIP PCI மையத்தையும் மற்றும் மெக்கானிக்கல் சர்குலேட்டரி சப்போர்ட் சிஸ்டம் (இம்பெல்லா, எக்மோ) என்பதையும் இம்மருத்துவமனை நிறுவியிருக்கி றது என்றார்.



