fbpx
Homeபிற செய்திகள்‘இனி ஒரு விதி செய்வோம்’ அறக்கட்டளை சார்பில் சிறப்பு குழந்தைகள் - சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா

‘இனி ஒரு விதி செய்வோம்’ அறக்கட்டளை சார்பில் சிறப்பு குழந்தைகள் – சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா

இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழா, 4 வது வருடமாக திருப்பூர் அவிநாசி சாலையில் அமைந்துள்ள தி சோல் ரெஸ்டாரண்டில் நடை பெற்றது. 75 சிறப்புக் குழந்தைகள் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றனர். மேலும், பல்வேறு துறை களில் சாதனை படைத்த சிறப்புக் குழந்தைகள் மற்றும் அதில் சாதனையாளர்கள் கவுரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.


அறக்கட்டளையின் நிறுவனர் கவிதா ஜெனார்த்தனன் சாதனை யாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். ஒவ்வொரு குழந்தையின் திறமையையும் அங்கீகரித்து, அவர்களுக்கு சமமான வாய்ப் புகளையும் ஊக்கத் தையும் வழங்குவது சமூகத்தின் கடமை என அவர் வலியுறுத்தினார். இசை, கலை, சிறப்பு அணி வகுப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகள் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். சிறப்புக் குழந்தைகளின் திறமைகளைக் கண்டு பார் வையாளர்கள் வியந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img