Homeபிற செய்திகள்கோவை அவினாசிலிங்கம் மனையியல் கல்வி நிறுவனத்தில் பாரதியார் நினைவுநாள் விழா

கோவை அவினாசிலிங்கம் மனையியல் கல்வி நிறுவனத்தில் பாரதியார் நினைவுநாள் விழா

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் தமிழ்த்துறை சார்பில் பாரதியார் நினைவு நாள் விழா நடைபெற்றது.


துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கர் தலைமை வகித்து பாரதியாரின் சிந்தனைகளை எடுத்துரைத்தார்.சென்னை ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் (ஓய்வு) முனைவர் பூமா, ‘பாரதியின் மூன்று கட்டளைகள்’ என்ற தலைப்பில்
சிறப்புரையாற்றினார். பாரதியாரின் படைப்புகளை பிற மொழி களில் மொழி பெயர்ப்பதன் அவசியம் குறித்து பேசி னார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.பிரியதர்சினி, உதவிப்பேராசிரி யர்கள் முனைவர் மு.கவிதா, முனைவர் த.நாகம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img