fbpx
Homeபிற செய்திகள்பெண்கள் கிக் பாக்ஸிங் லீக் போட்டி: பதக்கங்களை வென்ற ஈரோடு மாணவிகள்

பெண்கள் கிக் பாக்ஸிங் லீக் போட்டி: பதக்கங்களை வென்ற ஈரோடு மாணவிகள்

தமிழ்நாடு அமச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் மத்திய அரசின் கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் லீக் போட்டி சென்னை நேரு பூங்காவில் நடைபெற்றது. இதில் 18 மாவட்டத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் சென்னை மேயர் பிரியா, எஸ்.டி.ஏ.டி பொது மேலாளர் சுஜாதா, காமன்வெல்த் வீராங்கனையும் மாநில கிக் பாக்சிங் சங்கத்தின் துணைத் தலைவருமான ஆர்த்தி கிக், பாக்ஸிங் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இந்தப் போட்டியில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்ட கிக் பாக்ஸிங் சங்க பொதுச் செயலாளர் ஏ யூசுப், உறுப்பினர் கராத்தே ராஜா தலைமையில் 10 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் இரண்டு மாணவிகள் தங்க பதக்கமும் ஒரு மாணவி வெள்ளி பதக்கமும் ஒரு மாணவி வெண்கல பதக்கமும்ம் பெற்றனர்.
இவர்களை ஈரோடு மாவட்ட கிக் பாக்சிங் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.தென்னரசு மற்றும் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img