fbpx
Homeபிற செய்திகள்கரூரில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்த எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி

கரூரில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்த எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடவூர் தாலுகா முள்ளிப்பாடி ஊராட்சியில் சேர்வைக்காரன்பட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிழல் குடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதேபோல முள்ளிப்பாடி பகுதியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய சமுதாயக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது.

இன்று அந்த சமுதாயக்கூடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், முள்ளிப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நீலா வேல்முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

புதிய திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த எம்.எல்.ஏ சிவகாமசுந்தரிக்கு பொன்னாடை மற்றும் சால்வைகள் அணிவித்து ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img