fbpx
Homeபிற செய்திகள்டாஸ்மாக் கடையை மூடி விட்டு கள்ளுக்கடையை திறப்போம் - பிரச்சாரத்தில் அண்ணாமலை பேச்சு

டாஸ்மாக் கடையை மூடி விட்டு கள்ளுக்கடையை திறப்போம் – பிரச்சாரத்தில் அண்ணாமலை பேச்சு

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணா மலை ஆனைகட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது: பிரதமருக்கு பிடித்த பழங்குடி மக்கள் இருக்கும் ஆனைகட்டியில் இருக்கிறோம்.

மத்திய அரசின் திட்டங்கள் அதிகம் வந்து சேரும் இடம்.வளர்ச்சி அனைத்து பகுதிகளுக்கும் வர வேண்டும்.மலைப் பகுதிகளுக்கு சிறப்பு திட்டங்களை மோடி மட்டும் தான் வைத்துள்ளார். இங்கு பள்ளிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். மோடி வீடுகள், பைப் குடிநீர், எரிவாயு சிலிண்டர் மலை வாழ் மக்களுக்கும் வந்து சேர வேண்டும்.

செங்கல் சூளை விவகாரதில் திமுக குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டி விடுவார்கள். இவர்களே பிரச் சனை ஆரம்பித்து வேறு ஒருவர் மீது பழி போடுகிறார்கள். மக்கள் வாழ்வாதாரமும் பாதிக்காமல் இயற்கையோடு ஒன்றி இருக்கும் ஆனைகட்டி போன்ற பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இங்குள்ள மரங்கள் எல்லாம் ஒரு வைரத்துக்கு சமம்.

அதே சமயம் வளர்ச்சியும் இருக்க வேண்டும். இந்தியாவின் ஆதி குடி பழங்குடி தான்.மோடி தான் பழங்குடியை சேர்ந்த பெண்ணை குடியரசு தலைவர் ஆக்கினர்.மலை வாழ், பழங்குடி மக்களுக்கு பாதுகா வலன் மோடி தான்.

இந்த ஒரு வண்டி தான் டெல்லி செல்லும். மற்றவை எல்லாம் லோக்கல் வண்டிகள்.டெல்லிக்கு போகும் ஒரே வண்டி நான் இருக்கும் இந்த வண்டி தான். டாஸ்மாக்கை இங்கிருந்து எடுக்க வேண்டும். ஒரு டாஸ்மாக்கை எடுப்பதற்கு நாங்கள் அரசியலுக்கு வரவில்லை,எல்லா டாஸ்மாக்கை எடுக்க தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம்.

குடிப்பவர்களை குடிக்க வேண்டாம் என நாம் கூற முடியாது. ஜனநாயக நாட்டில் குடிக்க உரிமை இல்லையா என்பார்கள். நானும் தான் குடிப்பேன். டாஸ்மாக்கில் இருப்பவை ஸ்பிரிட்கள், அவற்றை மூடிவிட்டு கள்ளுக் கடையை திறப்போம்.

குடி என்பது கிராமத்திற்குள் வந்து ,பின்னர் வீட்டிற்குள் வந்து பெண்களுக்கு மன உளைச்சலாக உள்ளது. அதனால் தான் கள்ளுக்கடைகளை திறந்து டாஸ்மாக்கை மூடுவோம் என்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img