Homeபிற செய்திகள்தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் அனைத்து மதத்தினர் பங்கேற்ற இப்தார் விருந்து

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் அனைத்து மதத்தினர் பங்கேற்ற இப்தார் விருந்து

சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் மீனாட்சி மருத்துவமனை சார்பில் இப்தார் விருந்து நடைபெற்றது தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பன்னிரண்டாவது முறையாக இப்தார் விருந்து மஹாராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அனைத்து மதங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மருத்துவமனை சிறப்பு சுகாதார அட்டைகளை வழங்கியது. இது அவர்களை மருத்துவமனையில் சுகாதார சேவைகளில் சிறப்பு சலுகை பெற உரிமை உள்ளவர்களாக்குகிறது.

மஹாராஜா குழுமத் தலைவர் முகமது ரஃபி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், இந்தியன் எவாஞ்சலிகல் லூத்தரன் சர்ச், அருட்தந்தை ஜேக்கப் ஜெயராஜ் பாதிரியார், மீனாட்சி மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து , ஓய்வு பெற்ற மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தஅல்மாஸ், அலி, மீரா பஸ் நிறுவன உரிமையாளர் ஷர்புதீன், பேசிக்ஸ் கடை உரிமையாளர் ஷி.பி. ரஃபிக்தீன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர்.பாலமுருகன் வரவேற்றார். நிறைவில் மீனாட்சி மருத்துவமனையின் மூத்த தணிக்கை மேலாளர் மு.ஹாஜா நஜிமுதீன் நன்றி கூறினார்.

பங்கேற்பாளர்களுக்கு சிறப்பு சுகாதார அட்டைகளை மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் சிவக்குமார் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img