fbpx
Homeபிற செய்திகள்குறைமாத குழந்தைகளின் உயிர் காக்கும் திட்டம்; ஸ்ரீராம கிருஷ்ணா மருத்துவமனை சலுகை கட்டணம் அறிவிப்பு

குறைமாத குழந்தைகளின் உயிர் காக்கும் திட்டம்; ஸ்ரீராம கிருஷ்ணா மருத்துவமனை சலுகை கட்டணம் அறிவிப்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ரோட்டரி சங்கம், கோயம்புத்தூர் காட்டன் சிட்டி இணைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் ஐசியூவில்(NICU) சிகிச்சை தேவைப்படும் குறைமாத குழந்தைகளுக்கு நிதி உதவியுடன் சிகிச்சை அளிக்கும்  ‘லிட்டில் மிராக்கிள்ஸ்’ எனும்  முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இந்த விலை மதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சலுகை கட்டணத்தில் சிகிச்சை அளிக்கிறது.

இதற்கான, துவக்க நிகழ்ச்சியில்  எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ டி. லக்ஷ்மி நாராயணசுவாமி கலந்து கொண்டார். ரோட்டரி சங்கம் கோயம்புத்தூர் காட்டன் சிட்டியில் இருந்து செல்ல ராகவேந்தரன், அஜய் குப்தா, கிருஷ்ணா சமந்த், டாக்டர் நீதிகா பிரபு, சந்தோஷ் முந்த்ரா,பிரதீப் கர்னானி , பிரசன்ன குமார் கோத்தாரி மற்றும் கோயம்புத்தூர் காட்டன் சிட்டி ரோட்டரி சங்கத்தின்  உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img