கோவை, வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பதவி உயர்வுக்காக 300 க்கும் மேற்பட்ட இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தகுதி கோரி தேர்வு எழுதி இருந்தனர்.
இந்த தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு தராமல் குறைந்த அளவு மதிப்பெண் பெற்ற 23 இணைப் பேராசிரியர்களுக்கு மட்டும் பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
இதனைக் கண்டித்தும் அதிகளவு மதிப்பெண் பெற்ற இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரியும் இணை பேராசிரியர்கள் 300 க்கும் மேற்பட்டோர் பல்கலைக் கழக வளாகத்தில் நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



