நாமக்கல் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் பார்வையாளர் உஷா ராதா முன்னிலையில் பல்வேறு அரசுத் துறைகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்ற மாபெரும் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மக்களவைப் பொதுத்தேர்தல் 2024-ல் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து துறை அலுவலர்கள் தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் 2000-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், காவல் துறை (ம) பணியாளர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் 14,32,307 வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றார்கள்.
அதன்படி, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, வனத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் 2000- க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் இம்மாபெரும் பேரணியில் கலந்து கொண்டனர்.