இந்தியாவில் அலெக்ஸாவின் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி, மேம்படுத்தப்பட்ட ஆடியோ, அல்ட்ராசவுண்ட் மோஷன் டிடெக்ஷன், டெம்பரேச்சர் சென்சார் மற்றும் டேப் சைகை கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்ட புதிய Echo Dot 5-வது தலைமுறையை Amazon அறிமுகப்படுத்தியுள்ளது.
Echo Dot 5-வது தலைமுறை இன்னும் சிறந்த ஒலி அமைப்பைக் கொண்டதாகும்.
இது அதன் முந்தைய தலைமுறைகளைவிட தெளிவான குரல் மற்றும் இருமடங்கு பேஸ் விளைவை வழங்குகிறது.
உள்ளமைக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் மோஷன் டிடெக்ஷன் மற்றும் டெம்பரேச்சர் சென்சார் மூலம், ‘அறைக்குள் நுழையும்போது அறை விளக்குகளை தானாக ஆன் செய்ய’ மற்றும் ‘அறை மிகவும் சூடாக இருந்தால் தானாகவே ஏசி ஆன் செய்ய’, இணக்கமான எலக்ட்ரானிக்ஸ் மூலம் பயனுள்ள ஸ்மார்ட் ஹோம் நடைமுறைகளை அமைக்க வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது.
Echo Dot என்பது அமேசானின் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் ஸ்பீக்கராகும். வாடிக் கையாளர்கள் தங்கள் குரலைப் பயன்படுத்தி அலெக்ஸாவை ஆங்கிலம், இந்தி மொழிகளில் கேட்கலாம் – இசை, ஜோக்குகள், கேம்களை விளையாடுதல், ஸ்மார்ட் வீட்டு உபகரணங்களைக் கட்டுப்படுத்த, டைமர்களை அமைக்க, பட்டியல்களில் பொருட்களைச் சேர்க்கவும், நினைவூட்டல்களை உருவாக்கவும், பில்களை செலுத்தவும் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.
“புதிய Echo Dot எங்களுடைய சிறந்த விற்பனையான Echo தயாரிப்புகளை மேம்படுத்துகிறது. இப்போது ஆடியோ அனுபவத்தை மேம்படுத்தி, ஸ்மார்ட் ஸ்பீக்கருக்கு மோஷன் கண்டறிதல் மற்றும் வெப்பநிலை சென்சார்களைக் கொண்டு வந்துள்ளோம்.
அமேசான் டிவைசஸ்
வாடிக்கையாளர்கள் உண்மையிலேயே சுற்றுப்புற அனுபவத்திற்காக புதிய திறன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம், அங்கு தொழில்நுட்பம் பின்னணியில் மறைந்துவிடும் – ஓர் அறைக்குள் நடப்பது போன்றது மற்றும் அது மேஜிக் போல் ஒளிரும்“ என்று அமேசான் டிவைசஸ் இந்தியாவின் இயக்குநரும், மேலாளருமான பராக் குப்தா கூறினார்
Echo Dot 5 th Gen-ன் விலை ரூ.5,499 ஆகும். Amazon, Croma, Reliance Digital, Poorvika ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர் ஆகியவற்றில் கிடைக்கும்.