பெங்களூரு, அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், தேசிய கல்விக் கொள்கை (NEP)- 2020 அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட புதிய நான்கு ஆண்டு இளநிலைப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்தப் பாடத்திட்டங்கள் சமூக அளவில் அதிக உந்துதலை ஏற்படுத்தும் திறனைத் தயாரித்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இளம் தலைமுறை குடி மக்கள் சுய-கற்றல் திறன் கொண்ட இயல்பான மற்றும் பிரதிபலிப்புக் கொண்டவர்களாகத் திகழ இக்கல்வித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கல்வித்திட்டங்களில் நான்கு ஒருங்கிணைந்த கூறுகள் இடம்பெற்றுள்ளன.
ஒரு கடுமையான ஒழுங்குமுறை, ஒர் இடைநிலைக் கூறு, தொழில்சார் தயார்நிலையில் கவனம் செலுத்தும் தீவிர பயிற்சி, உலகத்துடன் திறம்பட ஈடுபடுவதற்கான திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அடித்தள படிப்புகளின் தொகுப்பு மற்றும் நெகிழ்வான வரவுகளின் முழுத் தொடர் என்ற நிலைகளில் அமைந்து பரந்த ஆய்விற்கு அனுமதிக்கிறது.
இணையதளம்
பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலைப்பட்ட படிப்புகள்: நான்கு ஆண்டு இளங்கலை – பொருளாதாரம் / ஆங்கிலம் / வரலாறு / தத்துவம் / சமூக அறிவியல், நான்கு ஆண்டு இளம் அறிவியல் – உயிரியல் / வேதியியல் / கணிதம் / இயற்பியல் / சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நிலையான வளர்ச்சி, நான்கு ஆண்டு இளம் கல்வியியல்/ இளம் அறிவியல் – உயிரியல் / வேதியியல் / கணிதம் / இயற்பியல் மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளம் லீttஜீs://ணீக்ஷ்வீனீஜீக்ஷீமீனீழீவீuஸீவீஸ்மீக்ஷீsவீtஹ்.மீபீu.வீஸீ/uரீ மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் – 9 மார்ச், 2023, தேசிய நுழைவுத் தேர்வு நாள் – 9 ஏப்ரல், 2023. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அதைத் தொடர்ந்து பட்டியலிடப்பட்ட மாணவர்களுக்கு தனிப்பட்ட நேர் காணல் நடத்தப்படும் மற்றும் ஜூலை இறுதியில் வகுப்புகள் தொடங்கும்.