Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாரியம்மன் கோவில் கொடைவிழாவில் அன்னதானம்

தூத்துக்குடி மாரியம்மன் கோவில் கொடைவிழாவில் அன்னதானம்

தூத்துக்குடி மாரியம்மன் கோவில் கொடைவிழாவை யொட்டி அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி போல்பேட்டை ஸ்டேட்பேங்க் காலணியில் உள்ள மாரியம்மன் திருக்கோவில் கொடை விழாவை கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 8 நாட்களும் இரவு சிறப்பு அலங்கார பூஜையுடன் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில கடந்த செவ்வாய்கிழமை இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்காக பஜனையுடன் 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில் கொடைவிழாவை யொட்டி நடைபெற்ற அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் மூர்த்தி, செயலாளர் சேகர், பொருளாளர் முக்காண்டி, துணைத்தலைவர் கருப்பசாமி, துணைச்செயலாளர் சுப்புராஜ், துணைப்பொருளாளர் இராஜாசீலன், விழாக்குழு தலைவர்கள் கணேசன், முனியசாமி, சுந்தர், கண்ணன், சேகர், பாலா, மணிகண்டன், கௌரவ ஆலோசகர்கள் ஆனந்தகுமார், புஷ்பராஜ், முருகன், சின்னத்துரை, ஜெபமணி, ஜெயக்குமார், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ரவி, சந்தோஷ், சின்னத்துரை, ராஜா பெரியசாமி, குட்டி, அருள்சுந்தர், உச்சிமகாளி, ராஜ், சிவகுமார், சேர்மத்துரை, நரேஷ்குமார், கோவில் அர்ச்சகர் ரவி, கோவில் நிர்வாகம் மற்றும் மகளிர் அணியினர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img