Homeபிற செய்திகள்கோவை சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் 5 நாட்கள் வேதாகம புத்தகம் விற்பனை விழா

கோவை சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் 5 நாட்கள் வேதாகம புத்தகம் விற்பனை விழா

கோவை சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் வேதாகம புத்தகங்கள், பரிசுப் பொருட்கள் விற்பனை விழா 5 நாட்கள் நடைபெற உள்ளது.
கோவை திருச்சி ரோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை (வெள்ளி முதல் செவ்வாய் வரை 5 நாட்கள்) வேதாகமங்கள், புத்தகங்கள் மாபெரும் விற்பனை விழா, வேர்டு ஆஃப் கிரைஸ்ட் சார்பில் நடைபெற உள்ளது.
வேதாகமங்கள், வேதாகம விளக்கவுரைகள், புத்தகங்கள், வேதாகம அகராதிகள், வேதாகம ஆராய்ச்சி நூல்கள், சிறுவர் வேதாகமங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம் என்றும் வாங்கிய பொருட்கள் மற்றும் புத்தகங்களுக்கு கிரெடிட் கார்டுகள், ஜிபே, பேடிஎம் போன்றவை மூலம் பணம் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை விழா தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறும். இது தொடர்பாக தகவல் பெற 8870184857, 9443116759 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

படிக்க வேண்டும்

spot_img