Homeபிற செய்திகள்தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 12,796 மாணவர்கள்

தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 12,796 மாணவர்கள்

தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ள மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தால் நாமக்கல் மாவட்டத்தில் 12796 மாணவர்கள் பயன்பெறுவர் என தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ் குமார் எம்பி., ஆகியோர் குறிப்பிட்டனர்.

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதி வேந்தன் மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000/- பெறுவதற்கான பற்று அட்டைகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழக முதல்வர் தமிழக கல்வி வளர்ச்சி, உயர்கல்வி பெறும் வாய்ப்பினை அதிகரிக்கும் வகை யில், அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். அதனடிப்படையில் அரசுப்பள் ளிகளில் முதலமைச் சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், பெண் கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ரூ.1,000/ வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தப்படுகிறது. அந்த வகை யில் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர் களின் தன்னம்பிக்கையை வளர்க்க வும், படிக்கும் ஆர்வத்தை உரு வாக்கிடவும், பெற்றோர்களின் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்கும் வகையிலும் மாதம் ரூ.1,000/- வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் புதுமைப்பெண் திட்டத் தின் கீழ் 18,651 மாணவியர்கள் மாதம் ரூ.1,000/- பெற்று பயன்பெற்று வருகின்றார்கள். தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் சுமார் 12,796 மாணவர்கள் பயன்பெற உள்ளார்கள். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் நாமக்கல் மாவட்டம் 2 ஆம் இடம் வகிக்கிறது. . இத்தகைய திட்டங்கள் மூலம் உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் முதலிடம் என்னும் மிகப் பெரிய சாதனையைத் தமிழகம் படைத்துள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் உயர்ந்து சமு தாயத்தையும் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., பேசுகையில், மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக் கும். இந்தியாவில் தமிழ்நாடு தான் உயர்கல்வி சேர்க்கையில் முதலிடம் வகிக்கிறது என்பது பெருமைக்குரியதாகும். மேலும், ஆசியாவிலேயே முதல் கால்நடை மருத்துவ படிப்பிற் கான பல்கலைக்கழகம் நம் தமிழ் நாட்டில் தான் உருவாக்கப் பட்டது. இது போன்ற வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து, பொறியியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல், கால்நடை அறிவியல், ஐ.டி.ஐ தொழில்பயிற்சி உள் ளிட்ட உயர்கல்வி பயிலும் 50 மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பற்று அட்டைகளை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.பி.ஜெகநாதன், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி, நகர்மன்ற தலைவர்கள் து.கலாநிதி (நாமக்கல்), ஆர்.கவிதா சங்கர் (ராசிபுரம்), நளினி சுரேஷ்பாபு (திருச்செங்கோடு), கல்லூரி முதல்வர்கள் முனைவர் சி.பானுமதி (ராசிபுரம்), அ. ராஜா (நாமக்கல் ), மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) க.சவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img