வடலூர் அருகே மேட்டுக்குப்பம் கிராமத் தில் வள்ளலார் ஆதர வற்றோர் இல்லம், வள்ளலார் மாணவர் இல்லம் ஆகியவை இயங்கி வருகிறது. இந்த ஆதர வற்றோர் இல்லங்க ளுக்கு நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருகை தந்தார். பின்னர் அவர், அங்கு வசித்து வரும் மாணவர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார்.
இதை யடுத்து அவர், இல்லங்களில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் முதியவர்களுக்கு பட்டாசு, இனிப்பு, வேட்டி, சேலை, நைட்டிகளை வழங்கினார். அதன்பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இல்லத்தில் உள்ள முதியவர்கள் ஒவ் வொருவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து விட்டு, அங்கிருந்து புறப் பட்டு சென்றார்.