fbpx
Homeபிற செய்திகள்இராணிப்பேட்டையில் வேளாண் இயந்திரங்கள் இயக்குதல், பராமரித்தல் முகாம்

இராணிப்பேட்டையில் வேளாண் இயந்திரங்கள் இயக்குதல், பராமரித்தல் முகாம்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்கள் இயக்குதல் மற்றும் பராமரித்தல் குறித்து நடைபெற்ற மாவட்ட அளவிலான முகாமினை ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டார்.

இந்த முகாமில் டிராக்டர் நிறுவனங்களான ஜான்டீர், மகேந்திரா, டபே, பவர்டிராக் மற்றும் சோனாலிகா, பவர்டில்லர் நிறுவனங்களான வி.எஸ்.டி, செராச்சி, பவர் வீடர்கள் கிசான் கிராப்ட், செராச்சி. ரோட்டவேட்டர் நிறுவனம் சக்திமான், மேசியோ, நெல் நடவு இயந்திரம் நிறுவனம் யான்மார் மற்றும் டிரோன் ஆகியவை விவசாயிகளுக்கு காட்சிபடுத்தப்பட்டு அதன் மான்ய விவரங்கள் மற்றும் சேவை பற்றி எடுத்து ரைக்கப்பட்டது. இதில் வேளாண்மைப் பொறியியல் துறை மொபைல் சர்வீஸ் வேனும் இடம் பெற்றது.

ஆளில்லாமல் டிரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிப்பதை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒத் திகையாக செய்து காண்பித்தனர். இந்த முகாமில் விவசாயிகள் சுமார் 105 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், இணை இயக்குநர் (வேளாண்மை) அசோக்குமார், செயற் பொறியாளர் (வே.பொ) ராஜேஷ், துணை இயக்குநர்கள் வேளாண்மை செல்வராஜ், வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் (வே.பொ) ரூபன்குமார் மற்றும் பொறியாளர்கள், நிறுவனங்களின் டீலர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img