fbpx
Homeபிற செய்திகள்கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

செய்தியாளர் பயணத்தில் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி.புதுப்பேட்டை, தில்லை விடங்கன், சி.முட்லூர் மற்றும் நக்கரவந்தங்குடி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணி களை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மே 24ந்தேதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு சொந்த வீடு கட்டும் கனவை நிறைவேற்றிடும் வகையில் ஒரு பயனாளிக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டிக் கொள்ள கலைஞரின் கனவு இல்லம் என்ற சிறந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்கள்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஒப்பந்த தாரர்கள் மூலமாகவோ அல்லது சொந்தமாகவோ கட்டிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பீட்டு தொகையானது படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

பரங்கிப் பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் கலை ஞர் கனவு இல்லம் திட்டதில் 2024-25 ஆம் ஆண்டிற்கு 189 வீடுகளும், 2025-26 ஆம் ஆண்டிற்கு 256 வீடுகளும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் நடைபெறும் கட்டுமான பணிகளை தரமாக மேற்கொள்வது மற்றும் விரைவுப்படுத்துவது குறித்து சி.புதுப்பேட்டை, தில்லைவிடங்கன், சி.முட்லூர் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களுக்கு நிரந்தர குடியிருப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்காக இத்திட் டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவில் குடியிருப்புகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
கட்டுமானப் பணிகளை துறை சார்ந்த அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து நக்கரவந் தன்குடி ஊராட்சியில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 25 வீடுகளும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 22 வீடுகளும், பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின் கீழ் 5 வீடுகளும் என 52 வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இவ்வூராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப்பணி களையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட மாதா கோயில் தெரு மற்றும் கொடிமரத் தெரு ஆகிய பகுதிகளில் ஆட்சேபணையற்ற புறம் போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பு ஆக்கிரமங்களை சில நெறிமுறைக்களுக்குட்பட்டு ஒருமுறை வரன் முறைப்படுத்தும் திட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அரசாணை வழிகாட்டுதலின் படி, தகுதியான பயனாளிகளுக்கு இலவசமாக வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img