“மனித நேயமே நல்ல சமுதாயத்தை உருவாக்கும் “குரும்பபாளையம், ஆதித் யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முன்னாள் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேச்சு.
ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட மளிப்பு விழாவானது நடைபெற்றது. இதில் முன் னாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.சி.சுப்பி ரமணியம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசு கையில், கிராமப்புற மாணவர்கள் பசிக்கு உணவு சாப்பிடுவது போல் அல்லாமல் உயிர் காப் பது போல் உழைத்து முன்னேற வேண்டும். படிப்பினால் உயர்வது மட்டும் அல்லாமல் மனித நேயத்துடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவே நல்ல சமுதா யத்தை உருவாக்கும் என்றார்.
இதில் கல்லூரி முதல்வர் முனைவர் அர.அனுஜா அவர்கள் கல்லூரியின் நடவடிக்கைகள், முன் னேற்றங்கள் பற்றியும் பல்வேறு ஐ.டி நிறுவனங் களுடன் செய்துள்ள புரிந் துணர்வு ஒப்பந்தம் பற்றியும் விளக்கிக் கூறினார்.
இதில் கல்லூரித் தாளாளர் இன்ஜினியர் சுகுமாரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ்விழாவில் இருநூறு மாணவர்கள் பட்டம் பெற்றனர். ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.