fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் நெரிசலை கட்டுப்படுத்த வாகன போக்குவரத்தில் அதிரடி மாற்றங்கள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்த ஆலோசனை...

திருவண்ணாமலையில் நெரிசலை கட்டுப்படுத்த வாகன போக்குவரத்தில் அதிரடி மாற்றங்கள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு

திருவண்ணாமலை மாநகராட்சியில் அருள்மிகு அருணாச்ச லேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகைத்தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு குழு அமைக்கப்பட்டு, தொடர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடைபெற்ற மூன்றாவது குழுக்கூட்டம் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர், சுதாகர் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை மாநகரில் உள்ள அனைத்து ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம், வியா பாரிகள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், தனியார் பேருந்து இயக்கு பவர்கள் சங்கம், தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சார்ந்த பிரதி நிதிகளுடன் அமைச்சர். எ.வ.வேலு ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யவும், இரவு நேரங்களில் சரக்கு வாகனங்கள் மட்டும் அனுமதி தருவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

கோவிலை சுற்றியுள்ள மாடவீதி தெருக்களையொட்டி வசிக்கும் உள்ளுர் வாசிகள் வாகனங்கள் சென்று வர ஏதுவாக, வட்டார போக்குவரத்து அலுவலர் மூலமாக, தனியாக அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்களது வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள் – மணலூர்பேட்டை, தண்டராம்பட்டு செல்வதற்கு- அசோக் பில்லர் – மத்தலாங்குளத்தெரு – பெரியார் சிலை – வாட்டர் டேங்க் – காந்தி நகர் – அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி – எடப் பாளையம் மணலூர்பேட்டை ரிங்ரோடு – சண்முகா கல்லூரி – அங்காளம்மன் கோவிலில் யூ டேர்ன் எடுத்து மணலூர்பேட்டை செல்ல வேண்டும், தாமரை நகர் வழியாக தண்டராம்பட்டு செல்ல வேண்டும்.

தண்டராம்பட்டு மற்றும் மணலூர் பேட்டையிலிருந்து திருவண்ணா மலை மத்திய பேருந்து நிலையம் வரும் பேருந்துகள் – அங்காளம்மன் கோவில் – கல்நகர் (ஆதில்பிரியாணி) – ஆடுத்தொட்டிதெரு – திருவள்ளு வர்சிலை- விஜயாமால் சந்திப்பு காந்தி நகர்- வாட்டர் டேங்க் – பெரியார் சிலை – மத்தலாங்குளத் தெரு-அசோக்பில்லர் வழியாக பேருந்துகள் இயக்கப்படவேண்டும், செங்கம் மற்றும் பெங்களுரு, திருப்பத்லூர் செல்லும் பேருந்துகள் – மத்திய பேருந்து நிலையம் – அசோக்பில்லர் – மத்தலாங்குளத்தெரு – பெரியார் சிலை -வாட்டர் டேங்க் – காந்தி நகர் – விஜயாமால் சந்திப்பு – திரு வள்ளுவர் சிலை -அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி – எடப்பாளையம் – வெளிவட்ட சாலை – அய்யம் பாளையம் சந்திப்பு வழியாக இயக்கப்படவேண்டும் எனவும், நகர பேருந்து – அசோக்பில்லர் – பெரியார்சிலை – வாட்டர்டேங்க் – காந்தி நகர் – விஜயாமால் – திருவள்ளுவர் சிலை – அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி – எடப்பாளையம் சந்திப்பு – மணலூர்பேட்டை ரிங்ரோடு – சண்முகா கலைக்கல்லூரி – அங்காளம்மன் கோவில் – காம ராஜர்சிலை – அக்னி தீர்த்தம் – ரமணாஸ்ரம் – அரசு கலைக்கல்லூரி -மேற்கு காவல்நிலையம் வழியாக இயக்கப்படவேண்டும்.

செங்கத்திலிருந்து திருவண்ணா மலை வரும் பேருந்துகள் – தண்டராம்பட்டு ரிங்ரோடு- மணலூர்பேட்டை ரிங் ரோடு – எடப்பாளையம் சந்திப்பு- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி – திரு வள்ளுவர் சிலை – விஜயாமால் சந்திப்பு – காந்தி நகர் வாட்டர் டேங்க் – பெரியார் சிலை – மத்தலாங் குளத்தெரு – அசோக்பில்லர் வழியாக இயக்கப்படவேண்டும். டவுன் பஸ்கள் – அரசு கலைக்கல்லூரி – ரமணாஸ்ரம் – அக்னி தீர்த்தம் – காமராஜர்சிலை -கல்நகர் (ஆதில்பிரியாணி) ஆடுத்தொட்டிதெரு – திருவள்ளுவர் சிலை – விஜயாமால் சந்திப்பு – காந்திநகர் – வாட்டர்டேங்க் – பெரியார்சிலை – மத்தாலங்குளத்தெரு – அசோக்பில்லர் வழியாகவும்) இயக் கப்படவேண்டும். மேற்கண்டவாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாநகரில் ஆன்மீக சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடங்கள் (வேலூர் & அவலூர்பேட்டை சாலையிலிருந்து வரும் ஆன்மீக சுற்றுலா வாகனங்கள் அண்ணா ஆர்ச் ஈசான்ய மைதானத் திலும், திண்டிவனம் – வேட்ட வலம் சாலையிலிருந்து வரும் ஆன்மீக சுற்றுலா வாகனங்கள் இரயில்வே ஸ்டேசன், காந்தி நகர் மைதானம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் நிறுத்த வும், திருக்கோவிலூர் சாலையிலிருந்து வரும் ஆன்மீக சுற்றுலா வாகனங்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் நிறுத்தவும், மணலூர்பேட்டை, தண்டராம்பட்டு சாலையிலிருந்து வரும் ஆன்மீக சுற்றுலா வாகனங்கள் எஸ்ஆர் ஸ்டீல் கம்பெனி எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலை யத்தில் நிறுத்தவும், செங்கம் சாலை யிலிருந்து வரும் ஆன்மீக சுற்றுலா வாகனங்கள் சந்தைமேடு மைதானம், அத்தியேந்தல் தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாநகரில் ஆட்டோக்கள் சென்றுவர அனுமதிக்கப்படும் வழித்தடங்கள் : – காந்திநகரிலிருந்து அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு செல்லும் ஆட்டோக்கள் பாலாஜி நர்சிங் ஹோம் – சன்னதி தெரு – ராஜம் மருத்துவமணை வழியாக இடது புறம் திரும்பி அய்யங்குளம் அக்ரஹார தெருவில் பயணிகளை இறக்கிவிட்டு- ரங்கா லாட்ஜ் தெருவழியாக திரும்பி செல்ல வேண்டும் (ஒருவழிப்பாதை) அல்லது ராஜம் மருத்துவமணை அடைந்து வலதுபுறம் திரும்பி கோபால் பிள்ளையார் தெருவில் பயணிகளை இறக்கிவிட்டு அண்ணா சிலை வழியாக செல்ல வேண்டும். (ஒருவழிப்பாதை) ரங்கா லாட்ஜ் சந்திப்பிலிருந்து ராஜம் மருத்துவமணைக்கு செல்ல அனுமதி யில்லை.
சன்னதி தெருவிலிருந்து (சக்கர குளம்) – ராஜம் மருத்துவமணை – கட்டபொம்மன் தெருவரை (அண் ணாமலையார் ஹோட்டல் ஆட் டோக்கள் செல்ல அனுமதியில்லை. எஸ்.பி.ஐ வங்கி (கொச மடத்தெரு) சந்திப்பிலிருந்து ராஜம் மருத்துவமணைக்கு ஆட்டோக் கள் செல்ல அனுமதியில்லை.

அய்யங்குளத்தெரு சந்திப்பிலிருந்து ராஜம் மருத்துவமணை வரை ஆட்டோக்கள் செல்ல அனுமதி யில்லை.
காந்தி சிலையிலிருந்து தேரடி வீதி கடலைகடை சந்திப்பு கற்பக விநாயகர் கோவில் வரை ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை.
பழைய மீனாட்சி தியேட்டர் சந்திப்பிலிருந்து ஆட்டோக்கள் அய் யங்குளம் தெருவழியாக சுப்பிரமணி சுவாமி கோவில் அருகில் பயணிகளை இறக்கிவிட்டு (சர்கார் கிட்சன் செண்டர்) கரிகாலன் தெருவழியாக திரும்பி செல்ல வேண்டும். (ஒருவழிப்பாதை) பெரிய மசூதி மற்றும் கரிகாலன் சந்திப்பிலிருந்து அய்யங்குளம் தெரு, சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை.
அசோக்பில்லர், ரவுண்டானாவிலிருந்து சின்னகடை தெருவழியாக பூதநாராயணன் கோவில் சந்திப்பு வரை ஆட்டோக்கள் செல்ல அனும தியில்லை.
காமராஜர் சிலையிலிருந்து திருமஞ்சன கோபுரத்தெரு – கற்பகவிநாயகர் கோவில் வரை ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை.

வடஒத்தவாடைத்தெரு, தென் ஒத்தவாடைத்தெரு, அம்மனியம்மன் கோபுரத்தெரு, ஆவாரங்காட்டுத்தெரு, ஆணைக்கட்டித்தெரு ஆகிய தெருக்களில் ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை.
மேலும், திருவண்ணாமலை நகரில் செயல்படும் அனைத்து பள்ளி களுக்கும் பௌர்ணமி நாட்களில் விடுமுறை அளித்து அதற்கு ஈடாக வேறொரு நாட்களில் பள்ளி செயல் பட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் 15 ஆகியவற்றில் பக்தர்கள் கார்பார்க்கிங் மற்றும் இதர வசதிகளை அறிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டி பாதகைகள் நான்கு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம்) வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருவண்ணாமலை நகருக்குள் செயல்படும் வங்கிகள் தங்களுக்கென சொந்தமாக கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதிகள் செய்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை நகருக்குள் அதிவேகமாக மற்றும் அதிக லோடுடன் செல்லும் வாகனங்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டு பறிமுதல் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் காவல்துறையினர் நகரின் முக்கிய இடங்களில் பணிபுரிவது அவசியம் எனவும், அதற்கேற்ப காவலர்களை பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டது.
அண்ணா ஆர்ச் மற்றும் ஆதில் பிரியாணி கடை கார்னர் ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றிட வருவாய்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மூல மாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் பட்டது.
திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து எல்லைக்குட்படாத ஆட்டோக்கள் திருவண்ணாமலை மாநகரில் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாநகர பகுதிகளில் மேற்குறிப்பிட்ட நடவடிக் கைகள் வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டு மென அமைச்சர் தஎ.வ.வேலு அறி வுரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img