ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு சாவடிகள் பணியாற்றும் அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி தேர்தல் பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா தேர்தல் நடத்தும் அலுவலர் மாநகராட்சி ஆணையர் மனிஷ் முன்னிலையில் நடைபெற்றது.
வரும் 5ம் தேதி வாக்குப்பதிவு அன்று வாக்காளர்கள் வாக்களிக்க 53 வாக்குப்பதிவு மையங்களில் 237 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள வாக்குப்பதிவு தலைமை அலுவலர் 237 மற்றும் கூடுதலாக (ரிசர்வ் 20%) 47 பேர் என மொத்தம் 284 பேர், இதேபோல் வாக்குப்பதிவு அலுவலர்கள் 1, 2 மற்றும் 3 நிலை அலுவலர்கள் தல 284 பேர் மேலும் 1000 வாக்குகளுக்கு மேல் உள்ள 58 வாக்குச்சாவடிகளில் 58 வாக்குப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 1194 நபர்களுக்கு ஓட்டு பதிவு அன்று மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எப்படி கையாள்வது, பழுது ஏற்பட்டால் அவற்றை
எப்படி சரி செய்வது மற்றும் வாக்காளர் பட்டியல் போன்றவற்றை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அடுத்து 2-ம் கட்ட பயிற்சி வரும் 27-ந் தேதியும் அதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 2-ம் தேதி 3-ம் கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. 4ம் தேதி ஒவ்வொரு பணியாளர்களுக்கும் எந்தந்த வாக்குச் சாவடிகளில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆணை வழங்கப்படும்,