fbpx
Homeபிற செய்திகள்‘சிங்கப்பூரைப் போல தூய்மையாக மாற்றும்’ “கவின்மிகு கரூர்” திட்டம்

‘சிங்கப்பூரைப் போல தூய்மையாக மாற்றும்’ “கவின்மிகு கரூர்” திட்டம்

கரூர் மாவட்டம் வெள்ளி யணை அருகே உள்ள தேவேந்திர நகரில், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் “கவின்மிகு கரூர்” என்ற திட்டத் தினை துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை குப்பை சேகரிக்கும் பணியை தொழில்நுட்ப ரீதியாகவும், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட மின்கல வாகனம் மூலம் குப்பை சேகரிக்கப்படும் இடம் குறித்து கண்காணிக்கப்பட உள்ளது.

பொதுமக்களிடமிருந்து சேகரித்த குப்பையை மக்கும் குப்பை, மக் காத குப்பை என தரம் பிரித்து, மக்கும் குப்பையை குழி அமைத்து அதில் சேகரித்து வைக்கும் பணி துவக்க வைக்கப்பட்டுள்ளது.

மக்காத பிளாஸ்டிக் கழிவு பொருட்களை இயந்திரம் மூலம் அரைத்து சாலை பணிகளுக்கும், மற்றும் அதிலிருந்து சீருடைகள் தயாரித்து பயன்படுத்துவதற் கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பதற்காக, எங்கெல்லாம் கழிப்பறை இல் லையோ அங்கு 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு புதிய கழிப்பறைகளும், கிட்டத்தட்ட 368 வீடுகளில் கழிப்பறை இருந்தும் பயன்பாட்டுக்கு இல் லாத நிலை உள்ளதை மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கும் இந்தத் திட்டத்தின் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சாக்கடைகளில் இருந்து கழிவுநீர் வழியாமல் இருப்பதற்கு பல்வேறு விதமான உறுஞ்சுகுழிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, துவக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளுக்கும் இது விரிவுப டுத்தப்படும். இந்தத் திட்டத்தை அரசு மட்டுமே செயல்படுத்த முடியாது. இதனை மக்கள் இயக்கமாக கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களும், ஊராட்சி மக்கள் பிரதிநிதிகளும், பொதுமக்களுடன் இணைந்து செயல்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவ மைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் போது இந்த திட்டம் குறித்து செயல் விளக் கத்தினை செய்தி மக்கள் தொடர்பு துறை நவீன மின்னணு வாகனத்தில் ஒளிபரப்பு செய்யப் பட்டது.
நிகழ்ச்சியில் தூய்மை காவ லர்களுக்கு சீருடை, சேலை, பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டது.

தூய்மை காவலர் மற்றும் பணியாளர்க ளுக்கு தாட்கோ மூலமாக நல வாரியத்தில் இணைந்து அதற் கான தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் அடை யாள அட்டை வழங்கி 50 நபர்களுக்கு தலா ரூபாய் 12,000 மதிப்பீட்டில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கி பேசியதாவது:

நமக்கு பிறகு 3- ஆண்டுகளுக்கு பின்பு சுதந்திரம் பெற்ற சிங்கப்பூரில் சென்னையில் உள்ள கூவம் ஆற்றை விட மோசமான ஆறு அங்கு இருந்தது. தற்போது உலகெங்கும் தூய்மைக்கு பேசப்படும் நகரமாக சிங்கப்பூர் உள்ளது.

அதேபோல இந்த “கவின்மிகு கரூர்” என்ற திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட் சிகளையும் தூய்மையான, சுகாதாரமான, ஊராட்சியாக மாற்றுவதற்கு இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கரூர் கோட்டாட்சியர் ரூபினா,வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, தூய்மை பணியாளர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img