fbpx
Homeபிற செய்திகள்அதிமுக வாட்ஸ்ஆப் குழுவில் நிர்வாகிகள், பொதுமக்களை இணைக்கும் நிகழ்ச்சி

அதிமுக வாட்ஸ்ஆப் குழுவில் நிர்வாகிகள், பொதுமக்களை இணைக்கும் நிகழ்ச்சி

சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை அதிமுக வாட்ஸ்ஆப் குழுவில் இணைக்கும் நிகழ்ச்சியை கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில்,கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை அ.தி.மு.க வாட்ஸ்ஆப் குழுவில் இணைக்கும் நிகழ்ச்சி சிதம்பரம் மேல வீதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலர் இ.கே.பி. மணிகண்டன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், பொருளாளர் தோப்பு கே.சுந்தர், இணைச் செயலர் எம்.ரெங்கம்மாள், துணைச் செயலர்கள் செல்வம், தேன்மொழி, முன்னாள் ஊராட்சி குழுத்தலைவர் க.திருமாறன், நகரச் செயலர் செந்தில்குமார், மாவட்ட பாசறைச் செயலர் டேங்க் ஆர். சண்முகம், இலக்கிய அணிச் செயலர் தில்லை ஏ.வி.சி.கோபி, சிறுபான்மை பிரிவு நிர்வாகி மீர்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டப் பொருளாளர் ஆர்.வி.சுவாமிநாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்துகொண்டு பொதுமக்களை அதிமுக வாட்ஸ்ஆப் குழுவில் இணைக்கும் முகாமை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலர்கள் வை. சுந்தர மூர்த்தி, பேராசிரியர் ரெங்க சாமி, நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் சுரேஷ்பாபு, பொதுக்குழு உறுப்பினர் கர்ணா, கிளை பேரூராட்சிச் செயலர் தமிழரசன், மாணவரணிச் செயலர் செந்தில்குமார், முன்னாள் தொகுதிச் செயலர்கள் கள்ளிப்பாடி சண்முகம், கோதை வசந்த குமார், முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.ஜெ.வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர தொழில் நுட்ப பிரிவுச் செயலர் மணிராஜ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img