Homeபிற செய்திகள்சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை : 6 மாணவர்களுக்கு ரூ.23 லட்சம் பரிசு

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை : 6 மாணவர்களுக்கு ரூ.23 லட்சம் பரிசு

சர்வதேச விளையாட்டு மற்றும் சதுரங்கப் போட்டிகளில் சாதனை படைத்த 6 மாணவர்களுக்கு, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் ரூ.23 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் தங்கம், வெண்கலம் வென்ற திருமுரு கணேஷ் மணி ரத்னத்துக்கு ரூ.10 லட்சமும், ஸ்குவாஷில் வெண்கலம் வென்ற ஷமீனா ரியாஸ், பாய்மரப் படகுப் போட்டியில் வெண்கலம் வென்ற முன்னாள் மாணவி நேத்ரா குமணன் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்கப்படுகிறது.

சதுரங்கத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற ஸ்ரீஹரி எல்.ஆர்., ஹரி கிருஷ்ணன், வி.எஸ்.ராகுல் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. ஒரே கல்வியாண்டில் மூன்று கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்கிய இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் எஸ்.ஆர்.எம். பெற்றுள்ளது. பரிசுகளை நிறுவனர் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img