தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பாக போதைக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் சிதம்பரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ஃபஹத் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் காரைக்கால் யூசுப் சிறப்புரையாற்றினார்
மாவட்ட செயலாளர் அப்துல்லாஹ், பொருளாளர் அப்துல் அஹத், துணை தலைவர் மஹபூப் கான், துணை செயலாளர்கள் அசார், யாசின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் காரைக்கால் யூசுப் கொடி அசைத்து மாரத்தானை துவக்கிவைத்தார். சிதம்பரம் பெரியண்ணா குளம், அருகில் துவங்கிய மாரத்தான் சிதம்பரம், கஞ்சி தொட்டி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் இளைஞர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.



