Homeபிற செய்திகள்கோவை கே.பி.ஆர். கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை கே.பி.ஆர். கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், ‘முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடல் 2026 – இனிது இனிது’ நிகழ்ச்சி நடந்தது. இதில், கல்லூரியில் படித்து முடித்த 1,500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சிக்கு, கே.பி.ஆர். குழும தலைவர் கே.பி.ராமசாமி தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் அகிலா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
விழாவில் முன்னாள் மாணவர்களின் இசை, நடனம், நகைச்சுவை நடிப்பு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பிரபல பாடகர்களின் சிறப்பு இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். வரும் ஆண்டுகளுக்கான செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img