கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 30-வது பொதுக்குழுக் கூட்டம் ஆடிஸ் வீதியில் உள்ள மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
முன்னாள் தலைவர் காமராஜ், முன்னாள் செயலாளர் தங்கராஜ், முன்னாள் பொருளாளர் ரத்தன்குமார் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
ஆண்டறிக்கையை தங்கராஜும், வரவு-செலவு அறிக்கையை ரத்தன்குமாரும் தாக்கல் செய்தனர்.
இதில் 80-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்று பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
தேர்தல் அதிகாரி பாலமுருகன், 2026&27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.
தலைவராக சுஜித், செயலாளராக சௌந்தர் மோகன், பொருளாளராக ரமேஷ் குமார், துணைத் தலைவர்களாக நிதின், ரவி, இணைச் செயலாளர்களாக ரமேஷ், கார்த்திக் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
செயற்குழு உறுப்பினர்களாக வைர பெருமாள், பாஸ்கர் பாண்டியன், தாமோதரன், பால்ராஜ், பிரசன்னா,
ஜீவா ஆகியோர் பதவியேற்றனர்.



