இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி மாவட்டம் 3206 சார்பில் ‘பல்ஸ் ஹார்ட் மாரத்தான் 2026’ 5 கி.மீ. நடை-மெதுவோட்டம்-
நிகழ்ச்சி நடைபெற்றது.

ராம்நகரில் உள்ள எஸ்பிடி மருத்துவமனைகளில் இருந்து தொடங்கிய மாரத்தான், நேரு மைதானத்தில் நிறைவடைந்தது.
இதில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ரோட்டரி மாவட்டம் 3206-ன் மாவட்ட ஆளுநர் ஆர்.எஸ். மாருதி உரையாற்றினார்.
நேரு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார், ஐ.எம்.ஏ. தமிழ்நாடு 2027 தலைவர் டாக்டர் ஏ.கே.ரவிக்குமார், எமரால்டு குழும தலைவர் கே.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரோட்டேரியன் டாக்டர் சுப்புராஜா டி. இதய நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார்.
நிகழ்வுத் தலைவர் ரோட்டேரியன் குர்பிரீத் சிங், இணைத் தலைவர் ரோட்டேரியன் காட்வின் மரியா விசுவாசம், ஒருங்கிணைப்பாளர் ரோட்டேரியன் டாக்டர் சுப்புராஜா, முதன்மை மன்றத் தலைவர் ரோட்டேரியன் சுவாமிநாதன்,
முன்னாள் தலைவர் ரோட்டேரியன் டாக்டர் சித்ரா மனோகர், செயலாளர் ரோட்டேரியன் கணேஷ் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



