fbpx
Homeபிற செய்திகள்மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் மாணவர் பாராளுமன்றம் பதவியேற்பு விழா

மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் மாணவர் பாராளுமன்றம் பதவியேற்பு விழா

கோயம்புத்தூர் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், தமிழக அரசின் வழி காட்டி நெறிமுறைகளின்படி மகிழ் முற்றம் (மாணவர் பாராளுமன்றம்) பதவி யேற்பு விழா இன்று சிறப் பாக நடைபெற்றது.
இவ்விழாவை முன் னிட்டு பள்ளி மாணவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல் மற்றும் பாலை என ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப் பட்டது.
தேர்தலில் வெற்றி பெற்ற குழுத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று பதவி யேற்று பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வு மூலம் மாணவர்களிடம் ஜனநாயக பண்புகள், தலைமைத்துவ திறன், பொறுப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்பை வளர்க்கும் நோக்கில் மாணவர் பாராளுமன்றம் செயல்படுத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரி வித்தது.

படிக்க வேண்டும்

spot_img