கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில் நரம்பியல் தீவிர சிகிச்சை தொடர்பான மூன்று நாள் மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கத்தின் முதல் இரண்டு நாட்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறைகள் நடைபெற்றன. இறுதி நாளில் நடைபெற்ற அறிவியல் அமர்வுகளில் பக்கவாதம், மூளையில் ரத்தக்கசிவு, தலையில் ஏற்படும் காயங்கள், மூளைச்சாவு மற்றும் உறுப்பு தானம், வலிப்பு, மூளை மற்றும் நரம்பு தொற்றுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்பு களில் நிபுணர் மருத்துவர்கள் உரையாற்றி னர். முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவிற்கு ராயல் கேர் மருத்துவம னையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மருத்துவர் மாதேஸ்வ ரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ராம் ராஜகோபாலன் கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். மேலும், மருத்து வர்கள் மேத்யூ ஜோசப், சிவக்குமார், பரந்தாமன், மருத்துவமனையின் சி.ஓ.ஓ. மணி செந்தில் குமார், பொது மேலாளர் வெங்கடேஷ் உள்ளிட் டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



