fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி கேத்தி சி.எஸ்.ஐ கல்லூரியில் ஏ.ஐ இக்னிஷன் யூனிட் தொடக்கம்

நீலகிரி கேத்தி சி.எஸ்.ஐ கல்லூரியில் ஏ.ஐ இக்னிஷன் யூனிட் தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் தொழில்நுட்பக் கல்வி மற்றும் இளைஞர்களின் வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், கேத்தியில் உள்ள சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் காக்நித்தோர்ஸ் ஏ.ஐ டெக் – பிசினஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து, ‘காக்நித்தோர்ஸ் இக்னிஷன் யூனிட் – இந்தியா’ என்ற புதிய ஏஐ அடிப்படையிலான தொழில்நுட்ப மையத்தை கல்லூரி வளாகத்தில் தொடங்கியுள்ளது.


கடந்த ஜூலை 10ம் தேதி நடைபெற்ற விழாவில் இந்த மையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த மையத்தின் மூலம் மாணவர்கள் மென்பொருள் உருவாக்கம், செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு, கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் பாதுகாப்பு, ஆட்டோமேஷன் உள்ளிட்ட துறைகளில் நேரடி தொழில் அனுபவம் பெறுவதுடன், சர்வதேச இன்டர்ன்ஷிப், தொழில்முறை வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் புதுமைத் திட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புகளையும் பெற உள்ளனர். மேலும், ஆசிரியர்களுக்கான புதிய தொழில்நுட்பப் பயிற்சிகள், சர்வதேச சான்றிதழ் திட்டங்கள் மற்றும் தொழில்துறையுடன் இணைந்த கற்றல் முறைகளும் இதில் இடம்பெறுகின்றன.

படிக்க வேண்டும்

spot_img