செயற்கை நுண்ணறிவு சார்ந்த பட்டப்படிப்புகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதற் கேற்ப ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் கார்த்திகேயன், பல்க லைக்கழகத்தில் ஆறு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட் டுள்ளதுடன் சுமார் 60 பணியி டங்கள் காலியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கோவை அவிநாசி சாலை கோல்ட்வின்ஸ் பகுதியில் வாரி அகாடமி எனும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதியார் பல்கலைக் கழக பதிவாளர் கார்த்திகேயன், பயிற்சி மையத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்றைய காலகட்டத்தில் பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் மிகவும் அவசியமானதாக மாறியுள்ளதாக தெரிவித்தார். மாணவர்கள் தங்களது இலக்குகளை அடையும் வகையில் பத்தாம் வகுப்பு முதலே திட்டமிட்டு படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சற்று குறைந்திருந்தாலும், இந்த ஆண்டு பாரதியார் பல்க லைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக கூறினார். குறிப்பாக இயற்பி யல் மற்றும் வேதியியல் துறைக ளில் மாணவர் சேர்க்கை குறைந் துள்ளதால், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து பாரதியார் பல்கலைக்கழகத்தில் ‘பயோ சயின்ஸ்’ என்ற புதிய பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட் டுள்ளதாகவும்
அத்துடன், பல்கலைக்கழகத்தில் ஆறு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
செயற்கை நுண்ண றிவு தொடர்பான படிப்பு களில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், அந்தப் பாடங்களை கற்பிக்கும் ஆசிரி யர்களுக்கும் நவீன தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள் கட்டமைப்பு மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்காக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி திட்டத்தில் புதிதாக 10 பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த வேண்டி அரசுக்கு கருத்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் இணை பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என 60 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.அதை தொடர்ந்து பேசிய வாரி அகாடமி தலைவர் லோகேஷ் பொன்னுசாமி, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தங்களது கல்வி நிறுவனம் தயார் செய்து வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இதுவரை 2500 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து 400க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களை உருவாக்கி உள்ளதாகவும் ஏழை மாணவ மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சி வழங்கி வருவதாகவும் கூறியவர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 ஏழை மாணவ மாணவியரை தேர்ந்தெடுத்து இலவச பயிற்சி வழங்கி வருவதாகவும் அரசு பள்ளி மாணவ மாணவிகளை போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்து அவர்களை வெற்றியடைய செய்வதே தங்கள் நோக்கம் என்றும் பெருமிதம் கொண்டார்.



