கோவை குமரகுரு கல்வி நிறுவன மாணவர்கள் உருவாக் கிய இந்தியாவின் முதல் மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியா சார்பாக இங்கிலாந்து மற்றும் மொனாக்கோ நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டி களிலும் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியாவின் கடல்சார் கண்டுபிடிப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, முதன் முறையாக மாணவர்களால் உருவாக்கப்பட்ட, மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அடுத்த தலை முறை மின்சார பந்தயப் படகை கோவை குமரகுரு கல்வி நிறு வன மாணவர்கள் அறிமுகப்ப டுத்தியுள்ளன. குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழா வில், ஐஎன்எஸ் அக்ரானி கப்பலின் செயல் அதிகாரி கேப் டன் பிரதீப் பிரேம்குமார் மற்றும் பெங்களூரு 6த் எலி மெண்ட் இன்ஜினியரிங் நிறு வனத்தின் நிறுவனரும் இயக்குந ருமான கிரெய்க் மரியோ டி’மெல்லோ ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாகக் கலந்து கொண்டு இந்தப் படகை அறி முகம் செய்து வைத் தனர். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள மாணவர் குழுக்களை அன்புடன் வரவேற்ற கேப்டன் பிரதீப் பிரேம்குமார், கோவையைச் சார்ந்த பொறியியல் மாணவர் குழுக்கள் சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித் துவப்படுத்தி போட்டியிடுவதைக் கண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் ‘யாலி 1.0’ திட்டம் முதல் இத்தகைய புதுமை முயற்சிகளு டன் தனக்குள்ள தொடர்பை நினைவுகூர்ந்த அவர், இந்த கோடையில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகும் மாணவர்களின் பொறுப்புணர்வை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். டீம் சீ சக்தி (Team Sea Sakth) மற்றும் டீம் இன்கிராஃப்ட் (Team InCraft) ஆகிய குழுக்கள் எங்குச் சென்றாலும் இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடியுங்கள். அதுவே உங்கள் அடையாளமாக இருக்க வேண்டும், என்றும் மாணவர்கள் ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் பிரதி நிதிகளாக இருந்தாலும் சர்வ தேச அரங்கில் அவர்கள் இந்தியாவின் தூதர்களாகவே அறியப்ப டுவார்கள் என்றும் கூறியதுடன், தேசபக்தி மற்றும் முதலில் தேசம் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத் தினார்.
மேலும் பல்வேறு பணி களை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறன், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), குவாண்டம் கம்ப் யூட்டிங் உள்ளிட்ட தொழில் நுட்ப முன்னேற்றங்கள் இன்றைய தலைமுறையை வரையறுக் கின்றன எனவும் இந்தியாவின் சுயசார்பு இலக்கை நோக்கி தொடர்ந்து புதுமைகளை உருவாக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு ஊக்கமளித் தார். குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி (KCT) மற்றும் குமரகுரு கலை அறிவியல் கல்லூரி (KCLAS) மாணவர்களால் முழுமையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நீர்முழ்கிக்கப்பல் மட்டும் மின்சார படகு உலகின் இரண்டு முக்கிய கடல்சார் பொறியியல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தயாராக உள்ளது. மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்து வரலாறு படைத்துள்ள டீம் இன்கிராஃப்ட், இங்கிலாந்தில் ஜூன் 29 முதல் ஜூலை 10, 2026 வரை நடைபெ றவுள்ள ஐரோப்பிய சர்வதேச நீர்மூழ்கிக் கப்பல் பந்தயத்தில் பங்கேற்க உள்ளது. உலகின் முன்னணி பல்கலைக் கழக மாணவர் குழுக்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், தண்ணீருக்கு அடியில், மோட்டார் இல்லாத நீர்மூழ்கிக் கப்பலை மனித சக்தியால் இயக்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் சவாலான பாதையை வெற்றிகரமாகக் கடக்க வேண்டும்.இந்தியாவில் இருந்து இந்தப் போட்டிக்குத் தேர்வான ஒரே கல்வி நிறுவனம் குமரகுரு கல்வி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கூபா (SCUBA) சுவாசக் கருவிகளை அணிந்தபடி, ஒரு மாணவர் பைலட் தனது கால் வலிமையால் பெடலிங் செய்து இந்த கப்பலை இயக்க வேண் டும். ‘டீம் இன்கிராஃப்ட்’ உருவாக்கி யுள்ள இந்த நீர்மூழ்கி கப்பலில், பறவைகளின் எலும்புக்கூடு அசைவுகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘ஸ்விஃப்ட் பேர்ட் (Swift Bird) கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது தண்ணீருக்கு அடியில் அனைத்து திசைகளிலும் எளிதாகத் திரும்ப உதவுவதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இதன் வெளிப்புற உடல் பகுதி சிப்பித் தூள் (Oyster shell powder) பூச்சைக் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அத்திட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் தெரிவித்தனர்.



