fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் நகரில் கரூர் வைஸ்யா வங்கி புதிய கோட்ட அலுவலகம் தொடக்கம்

திருப்பூர் நகரில் கரூர் வைஸ்யா வங்கி புதிய கோட்ட அலுவலகம் தொடக்கம்

இந்தியாவின் தனியார் துறை வங்கிகளுள் செழுமையான பாரம்பரியத்தையும், சிறப்பான செயல்பாட்டையும் கொண்டிருக்கும் 110 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கரூர் வைஸ்யா வங்கி (KVB), திருப்பூர் மாநகரில் தனது புதிய கோட்ட அலுவலகத்தை திறந்துள்ளது.

வங்கியின் நிர்வாக பணிகளையும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் செயல்பாடுகளையும் மேலும் சிறப்பாகவும், துரிதமாகவும் வழங்க வேண்டுமென்ற குறிக்கோளின் அடிப்படையில் இந்த கோட்ட அலுவலகத்தை இவ்வங்கி நிறுவியிருக்கிறது.

“இந்தியாவின் பின்னலாடை நகரம்“ என்று அழைக்கப்படும் திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு இவ்வங்கி அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த முக்கியமான நடவடிக்கை பிரதிபலிக்கிறது. இதன் மூலம் உள்ளூர் அளவிலேயே கடனுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரமும், மூத்த அதிகாரிகளின் அணுகலும் இப்பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களுக்கும், தொழில்துறை நிறுவனங்களுக்கும் எளிதாக கிடைப்பதை இவ்வங்கி இந்நடவ டிக்கையின் மூலம் உறுதி செய்திருக்கிறது.

தற்போது, திருப்பூர் மண்டலத்தில் கரூர் வைஸ்யா வங்கி 37 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த புதிய கோட்ட அலுவலகம் திறக்கப்பட்டிருப்பதால் வங்கியின் மூத்த அதிகாரிகளும் நிதித்துறை நிபுணர்களும் உள்ளூர் அளவிலேயே பணியாற்றி துரிதமான சேவையை வழங்க முடியும் என்பதால், உள்ளூர் தொழில் முனைவோர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆடை உற்பத் தியாளர்களுக்கு மிக விரைவாக வணிகக் கடன்களும் நிதி சேவைகளும் கிடைக்கும்.

கோட்ட அலுவலகத்தின் திறப்பு விழாவில், கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரமேஷ் பாபு பேசுகையில், “இந்தியாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் திருப்பூர் பிராந்தியம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

எங்கள் வங்கியின் புதிய கோட்ட அலுவலகத்தை தொடங்கியிருப்பதன் மூலம், நிர்வாகப் பணிகள் மற்றும் கடன்களுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் பெற்ற குழுக்களை வாடிக்கையாளர்களுக்கு மிக அருகில் நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.

இதன் மூலம் கடன் விண்ணப்பங்கள் மிக விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதல்கள் வழங்கப்படும். மேலும், உள்ளூர் தொழில் நிறுவனங்கள் உலக அளவில் பிற நாடுகளோடு போட்டிபோடவும், மேலும் வளர்ச்சி அடையவும் தேவையான சிறப்பான நிதி சேவைகள் உடனடியாக கிடைக்கும்” என்று கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img