fbpx
Homeபிற செய்திகள்மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

தூத்துக்குடி கணேஷ் நகரில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமரா ஜர் திறந்து வைத்த பாரம்பரியமிக்க ஏ.எம். எம்.சின்ன மணிநாடார் உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் கந்தன் காலனியில் உள்ள முத்துசாமி பிள்ளை தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கும் 3வது மைல் பகுதியில் உள்ள காமாட்சி தொடக்க பள்ளி மாணவ மாணவிகளுக்கும் புத்தகப் பை, நோட்டுகள், பேனா, பென்சில், ஸ்கேல் உள்பட கல்வி உபகரணங்களை அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை டேனியல் ட்ரஸ்டின் சேர்மன் தேவேந்திர புத்திரன், வகேஷ்குமார், அதிமுக மாவட்ட துணை செய ளாலர் சந்தனம், மீனவர் அணி முன்னாள் மாவட்ட செயலாளர் அகஸ்டின் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரெங்கநாதன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img