தமிழ்நாடு மாநில குருதிமாற்றுக் குழுமம் மற்றும் கோவை மாவட்ட அரசு ரத்த மையங்கள் சார்பில், “தேசிய தன்னார்வ ரத்ததான தினம் 2025” முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவையில் 2024 ஆம் ஆண்டு சிறப்பாக ரத்ததான முகாம்கள் நடத்தி, ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு ரத்த தானம் வழங்கிய அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் தளபதி ரத்த தான இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளாரும் திமுக மாநில தீர்மானக் குழு செயலாளருமான நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), இந்திய விமானப்படை மற்றும் கடற்படை ரத்ததான குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.



