இருதய நோயாளி ஒருவருக்கு இரட்டை அறை லெட்லெஸ் பேஸ் மேக்கரை வெற்றிகரமாகப் பொருத்தி சிகிச்சை அளித்துள்ளதின் மூலம் முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனை இருதய மருத்துவத்தில் ஒரு புதிய மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
வழக்கமான முறை யில் நோயாளியின் மார்பில் ஒரு சிறிய துளை யிட்டு பேஸ்மேக்கர் பொருத்தப்படும். கழுத்து எலும்புக்கு அருகே தோலுக்கு அடியில் மெல் லிய வயர்கள் மூலம் பேஸ்மேக்கர் சாதனம் இணைக்கப்படும்.
இதற்கு சிறந்த மாற்றான சிறிய வடிவிலான லெட் லெஸ் பேஸ்மேக்கர் வயர்கள் எதுவும் இன்றி மிகச் சிறிய துளையிட்டு கதீட்டர் உதவியுடன் தொடை நாளம் மூலம் நேரடியாக இருதயத்தின் வலது கீழறையில் பொருத்தப்படும்.
இது நோயாளிகளுக்கு மிகவும் சௌகரியமானது. பின் விளைவுகள் குறைவு. விரைவான குணம் கிடைக்கும்.

இந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லாரன்ஸ் ஜேசு ராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்தப் புதுமையான சிகிச்சையை செய்தனர், என்று கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறினார் மற்றும் இதை வெற்றிகரமாகச் செய்த மருத்துவ குழுவினரை அவர் பாராட்டினார்.
கேஎம்சிஹெச் இதய மின்இயற்பியல் துறை புதுமையான தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்வதில் முன்னணியில் உள்ளது என்றும் இந்தியாவில் அறிமுகமான ஒரு மாதத்திற்குள் வயர் இல்லாத பேஸ் மேக்கர் தொழில்நுட்பத்தை கேஎம் சிஹெச் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது என்றும் கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி தெரிவித்தார்.



