ஹிமாலயா பேபிகேர் குழந்தைகளால் மிகவும் நேசிக்கப்படும் பிராண்டு என்ற தனது சிறப்பான அந்தஸ்தை புதிய விளம்பரத்தின் வழியாக பெருமிதத்துடன் கொண்டாடி மகிழ்கிறது.
“மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும், அன்னையரால் நம்பப்படும், குழந்தைகளால் நேசிக்கப்படும்” என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த விளம்பரம், குழந்தைகளால் விரும்பப்படுகிற, அன்னையரால் முழுமையாக நம்பப்படுகிற, மற்றும் மருத் துவர்களால் தவறாமல் பரிந்துரைக்கப்படுகிற சிறப்பான தயாரிப்புகளை வழங்கும்.
குழந்தைகளுக்கான தனிப்பட்ட பராமரிப்பு பிரிவில் ஹிமாலயா பேபிகேரின் முதன்மையையும், தலைமைத்துவ நிலையையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த பிராண்டின் தரமான தயாரிப்புகள் நம்பகத்தன்மையையும், உயர் பராமரிப்புத்திறனையும் கொண்டவை என்ற செய்தியை இதயத்தில் பதிய வைக்கிறது. புதுமையான காட்சி அமைப்பைப் பயன்படுத்தி, இந்த விளம்பரத் திரைப்படம், கற்பனையாகக் குழந்தைகளுக்குக் குரல் கொடுக்கிறது.
‘All India Tiny Talk Summit’-க்கு (அகில இந்திய மழலையர் உச்சி மாநாடு) பிறகு, உலகிலேயே தங்களது கருத்துக்களை நேர்மையாக வெளிப்படுத்துபவர்களான குழந்தைகளைப் பேட்டி காண நிருபர்கள் கூடும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புச் சூழலை தொடக்க காட்சியாகக் கொண்டு இந்த விளம்பர திரைப்படம் சுவாரஸ்யமாக தொடங்குகிறது. இது குழந்தைநல மருத்துவர்களிடம் பெற்றோர்கள் வைத்துள்ள நம்பிக்கையை தெளிவாகவும், வலுவாகவும் எடுத்துரைக்கிறது.
இந்த விளம்பரம், “அன்னையரால் நம்பப்படுகிற, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்ற, ஹிமாலயா பேபிகேர் குழந்தைகளால் பெரி தும் நேசிக்கப்படும் ஒரு பிராண்டு” என்ற எளிய மற்றும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் செய்தியை வெளிப்படுத்துகிறது.
இந்த விளம்பரம் குறித்து, ஹிமாலயா வெல்னஸ் கம்பெனியின் வணிக இயக்குநர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: ஹிமாலயா பேபிகேர்-ல், எங்கள் பயணம் எப்போதும் குழந்தைகள் நலனுக்கே முதன்மை முன்னுரிமை என்ற நம்பிக்கையால் வழிநடத்தப்படுகிறது.
நாம் அதிகமாக அக்கறை காட்டும் குழந்தைகளின் கருத்துகளுக்கு குரல் கொடுப்பதன் மூலம் இந்த விளம்பரம் அந்த உணர்வை அழகாக சித்த ரித்தது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விளம்பரம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய எட்டு மொழிகளில் வெளியாகிறது. இந்தியா முழுவதும் உள்ள பெற்றோர்களிடம் இந்தச் செய்தி ஆழமாகச் சென்றடைவதை இது உறுதி செய்யும்.



