fbpx
Homeபிற செய்திகள்தனிஷ்கின் தங்க தற்சார்பு முயற்சியில் சச்சின் டெண்டுல்கர் இணைந்தார்

தனிஷ்கின் தங்க தற்சார்பு முயற்சியில் சச்சின் டெண்டுல்கர் இணைந்தார்

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிஷ்க், இந்தியாவில் அதிக நம்பிக்கைக்குரிய ஆபரண பிராண்டாக திகழும் நிலையில் இந்நாட்டில் பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றும் இந்நாட்டின் மிகப்பெரிய இயக்கத்தை தொடங்கி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. தனிஷ்க் பழைய தங்க நகைகளை புதிய, நவீன வடிவமைப்புகளாக மாற்றிக் கொள்வதன் மூலம் நம் நாடு தங்க இறக்குமதிக்காக பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கிறது.
இந்நிலையில், நாட்டின் நலன் சார்ந்த குறிக்கோளை வலுப்படுத்த பிரபல ஆளுமையான கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடன் தனிஷ்க் இணைந்திருக்கிறது.

2025 நவம்பர் 30-ம் தேதி வரை அனைத்து கேரடேஜ்களிலும் (9 KT என்ற குறைந்த அளவு வரை) பழைய தங்க நகைகளை மாற்றும்போது பூஜ்ய (0%*) பிடித்தம் என்ற சிறப்பு சலுகையை நுகர்வோர்களுக்காக தனிஷ்க் முதன் முறையாக வழங்குகிறது. டைடன் கம்பெனி லிமிடெட்டின் ஆபரண பிரிவின் தலைமை செயலாக்க அதிகாரி அஜாய் சாவ்லா கூறியதாவது:

பல்வேறு வகை கேரட்டேஜ்களிலும் (9 KT போன்ற மிக குறைவானதிலும் கூட) இந்த பண்டிகை காலத்திற்காக முதன்முறையாக நாங்கள் வழங்கும் 0% பிடித்தம் என்ற சலுகைத் திட்டத்தின் மூலம் நமது நாட்டை சுயசார்புள்ளதாக மாற்றும் மகத்தான லட்சிய திட்டத்தில் ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்பதை நாங்கள் மிக எளிதானதாக ஆக்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இது குறித்து கூறியதாவது: இன்றைய காலத்திற்கேற்ற நவீன வடிவமைப்புகளாக மாற்றுவதோடு, தங்க இறக்குமதிகள் மீது நமது நாடான இந்தியாவை சார்ந்திருப்பதை குறைப்பதனால் ஒரு மிகப்பெரிய லட்சியத்திற்கும் பங்களிப்பை வழங்குகிறது. இந்த தங்க எக்ஸ்சேஞ்ச் திட்டம், ஒவ்வொரு இந்தியரும் பயன்படுத்த வேண்டிய, அதன்மூலம் வெற்றியை தனக்கும், நாட்டிற்கும் சாத்தியமாக்குகின்ற ஒரு சிறந்த முன்னெடுப்பாக இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img