fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் பிராந்திய யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில் சிறுகுறு, நடுத்தர - ஏற்றுமதி நிறுவனங்களுக்கான...

திருப்பூர் பிராந்திய யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில் சிறுகுறு, நடுத்தர – ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கடன் முகாம் – 80 பேருக்கு ஒப்புதல் கடிதம்

யூனியன் பாங்க் ஆப் இந்தியா, திருப்பூர் பிராந்திய அலுவலகம் சார்பில் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஏற்று மதி நிறுவனங்களுக்கான கடன் முகாம், திருப்பூர் கொங்கு நகர், அப்பாச்சி நகரில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வங்கியின் மும்பை தலைமை அலு வலக கடன் பிரிவு பொது மேலாளர் அலோக் குமார், அன்னியச் செலாவணி துணை பொது மேலாளர் அமித் குமார் சின்ஹா, கோவை மண்டல தலைமை பொது மேலாளர் எஸ்.ஏ.ராஜ் குமார், திருப்பூர் பிராந்திய மேலாளர் செல்லதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் ஏற்றுமதி யாளர்கள் சங்க கௌரவ தலைவர் ஏ.சக்திவேல், சங்க தலைவர் கே.எம்.சுப் பிரமணியன், ஈஸ்ட் மேன் ஏற்றுமதி நிறுவன சேர்மன் என்.சந்திரன், ராயல் கிளாசிக் குழும சேர்மன் ஆர்.கோபாலகிருஷ்ணன், எஸ்.என்.க்யூ.எஸ் குழும சேர்மன் இளங்கோவன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

தலைமை அலுவலக பொது மேலாளர் அலோக் குமார், பேசுகையில், சிறு குறு நடுத்தர மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வங்கியின் கடன் திட்டங்கள் பற்றியும் ஆற்றிவரும் சேவை பற்றியும் எடுத்து ரைத்தார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கௌரவ தலைவர் ஏ.சக்திவேல் பேசுகையில், திருப்பூரின் ஏற்றுமதி தொழில் ஜனவரி – பிப்ரவரி மாதங்களுக்கு பின் மேலும் வளர்ச்சி பெறும், என்றார். மேலும் வங்கியின் தேவைகளையும், தொழிலாளர் பற்றாக்குறை பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.

80க்கும் மேற்பட்டோ ருக்கு கடன் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏற்றுமதியாளர்கள், தொழில் முனைவோர், வங்கி வாடிக்கையாளர்கள், வங்கி அதிகாரிகள், பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img