கோவை – டிரினிட்டி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு விழா ஹார்மனி 2k25 என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில மாலை 5 மணிக்குத் நிகழ்ச்சியை ராமநாதபுரம் சீரோ மலபார் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் ஆயர் மார் பால் ஆலப்பாட் தொடங்கி வைத்தார்.
வருவாய் கோட்ட அலுவலர் மாருதி பிரியா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். டாக்டர் கே.ஏ.குரியாச்சன் மாண வர்களை வாழ்த்திப் பேசினார்.
பள்ளி தலைமையாசிரியர் டாக்டர் ஜே. தனலட்சுமி, தாளாளர் அருட்தந்தை மார்ட்டின் பட்டருமடத்தில், அருட் தந்தை மெல்வின் சோவ் வள்ளூர், அருட்தந்தை ப்ராங்க் கண்ணநாயக்கல் பள்ளிக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர். பள்ளிச் செயலாளர் எம்.வி.அந்தோணி, மாண வர்களை வாழ்த்தினார்.



