கோவையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் (SVPISTM) மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி டெக்ஸ்டைல்ஸ் படிக்கும் மாணவி எஸ். இந்துஜா, நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஹரியானாவின் பல்வா லில் உள்ள ஆனந்தம் ஹவேலியில் நடைபெற்ற என்.எஸ்.எப் புரோ லிஃப்ட் பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட் லிஃப்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தைப் பிடித்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
57 கிலோ ஜூனியர் பெண்கள் பிரிவில் போட் டியிட்டு, அமெச்சூர் பவர் லிஃப்டிங் சங்கத்தின் உறுப்பினரான இந்துஜா, தேசிய பட்டத்தைப் பெற்றுத் தந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இது விளையாட்டு மற்றும் உடற்தகுதியில் சிறந்து விளங்க மேலும் பெண் மாணவர்களை ஊக்கு விக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.



