fbpx
Homeபிற செய்திகள்கோவை ரயில்வே கிராசிங்கில் அதிர்ச்சி சம்பவம்:சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது திடீரென விழுந்த ரயில்வே கேட்

கோவை ரயில்வே கிராசிங்கில் அதிர்ச்சி சம்பவம்:சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது திடீரென விழுந்த ரயில்வே கேட்

கோவை துடியலூர்& சரவணம்பட்டி சாலை யில் அமைந்துள்ள ரயில்வே கிராசிங்கில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றது. ரயில்வே கேட் திடீரென கீழே விழுந்ததால் அங்கு சென்று கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
கோவை துடியலூரிலி ருந்து சரவணம்பட்டி நோக்கிச் செல்லும் மக்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ரயில்வே கிராசிங்கை கடந்து கொண்டிருந்த நேரத்தில், எச்சரிக்கை மணி ஒலிக்காமல், எந்த அறிகுறி யும் இன்றி ரயில்வே கேட் திடீரென கீழே விழுந்துள் ளது. இதனால் கேட்டைத் தாண்ட முயன்ற வாகன ஓட்டிகள் தப்பி ஓடிய தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

கேட் கீழே விழுந்ததில் சில இருசக்கர வாகனங்க ளுக்கு லேசான சேதம் ஏற்பட்டாலும், பெரும் சேதம் ஏற்படாமல் உயிர் பிழைத்தது அதிர்ஷ்ட மானதாக கூறப்படுகிறது.
சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்து ஓரங்கட்டினர். பின்னர் ரயில்வே பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக ஓடிவந்து கேட்டை மீண்டும் உயர்த்தி வாகனங்களை பாதுகாப் பாக வெளியேற்றி நிலைமை யைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேட் இயங்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறே காரணமாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசா ரணை நடத்திய அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். மேலும், எச்சரிக்கை மணி செயலிழப்பு மற்றும் கேட் இயந்திர பராமரிப்பில் குறைபாடு இருந்ததா என் பதை ரயில்வே பொறியியல் பிரிவு ஆய்வு செய்து வருகிறது.

கிராசிங்கில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்ப டுத்த வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் வலி யுறுத்தி வருகின்றனர். “கேட் திடீரென விழுந்தது மிகவும் ஆபத்தானது. குழந்தைகள் அல்லது வயதானவர்கள் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது,” என்று அங்கே இருந்த ஒருவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img