முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் ரூ.208.5 கோடியில் பிரமாண்டமாக உருவான செம்மொழி பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.

கோவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்போது முதலமைச்சராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கோவை காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் 165 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற் பட்டதும், இந்தத் திட்டம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் செம்மொழி பூங்கா திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்துயிர் கொடுத்தார்.

முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 208.50 கோடியில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண் டது. இந்த பணிகளை கடந்த 2023 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தற்பொழுது அந்த பணிகள் நிறைவு அடைந்து உள்ளன.

இதைத் தொடர்ந்து கோவை மக்களின் பொழுதுபோக்கு தளமாக விளங்க உள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது திறந்து வைத்து பார்வையிட்டார். பூங்காவை முழுமையாக சுற்றிப்பார்த்து ரசித்தார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி, நக ராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர், மாநகராட்சிமேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், ஆணையர் மா.சிவகுரு பிராபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



