இதய மின் உடலியல் என்பது இதயத்தின் மின் அமைப்பில் ஏற்படும் கோளாறுகளைக் (அரித்மியாக்கள்) கையாளும் மருத்துவப் பிரிவாகும்.
பொதுவாக இதயத் துடிப்புக் கோளாறுகள் என்று அழைக்கப்படும் இந்த நோய்கள், இதயத்தைப் பாதிக்கும் தீவிர நோய்களில் ஒன்றாகும். இதனால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனைச் சரிசெய்ய அதிநவீன க்ரையோ அப்ளேஷன் சிஸ்டம் மற்றும் என்சைட் எக்ஸ் சிஸ்டம் கேஎம்சிஹெச்-ல் உள்ளது.
கேஎம்சிஹெச்-ல் உள்ள இதய மின் துடிப்பு மற்றும் மின் உடலியல் பிரிவு, நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு சிகிச்சையளிக்க அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களைக் கொண்டுள்ளது.
இந்நிலையில் கேஎம்சிஹெச் மருத்துவமனை கார்டியாக் பேசிங் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி துறையின் சார்பில் கோவை ஹார்ட் ரிதம் (CHRS 2025) கருத்தரங்கு நவம்பர் 23-ல் நடைபெற்றது.
இது CHRS நிகழ்வின் 10-வது பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதயத் துடிப்பு நிர்வாகத்தில் புதிய முன்னேற்றங்கள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இந்தியா முழுவதிலும் இருந்து 20-க்கும் மேற்பட்ட நிபுணர்களும் 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.
கிரையோ அப்லேஷனை தமிழ்நாட்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு நோய்க்கென்ற ஒரு பிரத்யேக சிகிச்சை மையத்தையும் துவக்கிய பெருமை கேஎம்சிஹெச் மருத்துவமனையைச் சாரும் என்று கருத்தரங்கு ஏற்பாட்டு செயலாளர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் தெரிவித்தார்.
கருத்தரங்கைத் துவக்கிவைத்து உரையாற்றிய கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, இதயத் துடிப்பு கோளாறுகளுக்கான இந்த பிரத்யேக மையத்தினால் சிறப்பான சிகிச்சைகளை உரிய நேரத்தில் குறைவான செலவில் அளிக்கமுடியும் என்றும் கேஎம்சிஹெச் மருத்துவமனை கார்டியாக் பேசிங் மற்றும் எலக்ரோபிசியாலஜி துறை இதில் முன்னோடி யாகத் திகழ்கிறது என்றும் குறிப்பிட்டார்.



