fbpx
Homeபிற செய்திகள்பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டம் சார்பில் எம்எஸ்எம்இ மெகா அவுட்ரீச் முகாம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டம் சார்பில் எம்எஸ்எம்இ மெகா அவுட்ரீச் முகாம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்ட அலுவலகம் சார்பில் சிறுகுறு தொழில் சேவைக்கான (எம்எஸ் எம்இ) மெகா அவுட்ரீச் முகாம் நேற்று (24ம் தேதி) நடைபெற்றது.

இதில் வங்கியின் பொது மேலாளர் (தலைமை அலுவலக கார்ப்பரேட் கடன் பிரிவு) ஆதித்ய குமார் பதி, துணை பொது மேலாளரும் வட்டத் தலைவருமான சாஜித் ஹீசைன் ஆகியோர் கலந்து கொண்டு சிறுகுறு தொழில் வளர்ச்சிக்கான வங்கி செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்வில் கோவை மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த வங்கியின் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். வாடிக்கையாளர்களின் வணிகத் தேவைகளை கேட்டறிந்த வங்கி அலுவலர்கள், அதற்குரிய வங்கி சேவைத் திட்டங்களை பரிந்துரைத்தனர்.

இந்த முகாமின்போது வாடிக்கையாளர்களுக்கு 80 கோடிக்கும் அதிகமான எம்எஸ்எம்இ கடன்களுக்கான முன்னனுமதி கடிதங்களை பொது மேலாளர் ஆதித்ய குமார் பதி, வட்டத் தலைவர் சாஜித் ஹீசைன் ஆகியோர் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img