fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்ற செய்யும் பணிகள்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரியில் எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்ற செய்யும் பணிகள்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்கி வந்தனர். பின்னர் மாவட்டத்தில் 108 உதகமண்டலம், 109 கூடலூர், 110 குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து திரும்பி பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் உதகை நகராட்சி அலுவலகத்தில், பதி வேற்றம் செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதேபோல் உதகை நக ராட்சி பட்பயர் பகுதியில் வாக்குசா வடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களை திரும்ப பெறும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், வாக்கா ளர்களிடையே பூர்த்தி செய்த படிவங்கள், வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் தாமதமின்றி வழங்கும் வகையில் உதகை நக ராட்சி சார்பில், ஒலி பெருக்கியின் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும், பூர்த்தி செய்து பெறப்பட்ட படி வங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர்களிடம் வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் பிரிவில், வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வது குறித்த சந்தேகங்களை தெரிந்து கொள்ள செயல்பட்டு வரும் தேர்தல் உதவி மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து, வாக்கா ளர்கள் தங்கள் சந்தேகங்களை தெரிந்துகொள்ள 1950 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தேர்தல் பிரிவு அலுவலர்களால் தெரிவிக்கப்பட் டது.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) லோகநாயகி, வாக்கு பதிவு அலுவலர் / உதகை வருவாய் கோட்டாட்சியர் டினு அரவிந்த், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், உதகை நகராட்சி ஆணையர் கணேஷன், தேர்தல் தனி வட்டாட்சியர் சீனிவாசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img